அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்!
ஏறுகிற மேடைகளில் எல்லாம் அழுவதாலோ என்னவோ? நடிக்கிற எல்லாப் படங்களிலும் வசூலை அள்ளிக்குவிக்கிறார் சிவகார்த்திகேயன்.
லேட்டஸ்ட் ரிலீஸ் ”ரெமோ”வும் அவருடைய ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்து விட்டது. தமிழில் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் ஏறுமுகத்தில் சுபமாக சென்று கொண்டிருக்க, அந்த பாப்புலாரிட்டியை வைத்து இப்போது தெலுங்கிலும் கல்லா கட்ட உதவியிருக்கிறது ”ரெமோ”.
ரிலீசான வேகத்தில் உலகம் முழுக்க உள்ள தமிழ் ரசிகர்களிடம் சிறப்பாக சென்று சேர்த்ததன் எதிரொலியாக அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் படத்தை தெலுங்கில் டப் செய்து ரிலீஸ் செய்ய ஆயத்தமாகி வருகிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் ”ரெமோ” தெலுங்கு வெர்ஷனுக்காக ஆடியோ ரிலீஸ் பங்ஷன் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டாலும் அவரே நடித்த படம் இதுவரை டப்பிங் கூட செய்யப்பட்டு ரிலீசானதில்லை. அந்த வகையில் முதல் முறையாக டப்பிங் செய்யப்படும் இப்படத்தை தெலுங்கில் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜூ வாங்கி ரிலீஸ் செய்கிறார்.
தன் படங்களுக்கு விளம்பரம் செய்து ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் சளைக்காத தயாரிப்பாளர் தில் ராஜூ என்பதால் படத்தை அவர் வசம் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த டப்பிங் வெர்ஷனுக்கு தெலுங்கு ரசிகர்களிடம் எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பதைப் பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிக்கிறார் சிவகார்த்திகேயன். ஒருவேளை ட்ரையல் வெர்ஷன் சக்சஸ் ஆகும் பட்சத்தில் இனி தெலுங்கிலும் சிவகார்த்திகேயனின் கழுகுப்பார்வை தெலுங்கிலும் இருக்கும் என்பது உறுதி.
விஜய், சூர்யா, கார்த்தி, விஷால் என இப்போதுள்ள தமிழ்சினிமாவின் இளம் ஹீரோக்களின் படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அள்ளுங்க! அள்ளுங்க!!