‘P T சார்’ திரைப்பட வெற்றி விழா!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கடந்த மே 24ஆம் தேதி, கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக வெளியான திரைப்படம் ‘P T சார்’. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டினில் பெரும் வரவேற்பைக் குவித்த இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில் நடிகர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியதாவது…

ஒவ்வொரு பத்திரிக்கை நண்பர்களுக்கும் எங்கள் படத்தைச் சரியாகக் கொண்டு சேர்த்ததற்காக என் நன்றி. இன்று வரை படம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது அதற்குக் காரணம் நீங்கள் தான். உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் அறிவுரையின் படி நல்ல படங்களைத் தொடர்ந்து செய்வேன். ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு இந்தப்படத்தைத் தயாரித்ததற்காக ஐசரி சாருக்கு நன்றி. பெண்கள் வேலை பார்க்கும் மில்லில் இரண்டு ஸ்பெஷல் ஷோ போட்டார்கள் என்று சொன்ன போது, படம் வசூலித்தது என்பதை விட அதிகம் சந்தோசப்பட்டார் அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து உங்களுடன் படம் செய்ய ஆவலுடன் இருக்கிறேன். இந்தப்படத்தை நம்பி வந்த ஆர்டிஸ்ட் அனைவருக்கும் நன்றி. கோர்ட் ரூம் சின்ன போர்ஷன் அதை நம்பி வந்து, எங்களுக்காக நடித்து தந்த பாக்யராஜ் சாருக்கு நன்றி. இளவரசு அண்ணன் ஒரு பாத்திரமாக வாழ ஆரம்பித்து விடுகிறார். ஷீட்டிங்கில் அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடிப்பதைப் பார்த்து அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். பிரபு சார், பட்டிமன்றம் ராஜா சார், தேவதர்ஷிணி மேடம், என பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருந்தார்கள். பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள். இதையெல்லாம் ஒழுங்கு படுத்தி, நல்ல டைரக்டர், சிக்கனமான டைரக்டர் என்று பெயரெடுத்த கார்த்திக்கிற்குப் பாராட்டுக்கள். இந்தப்படத்தில் என்னை நாயகனாக்கியதற்கு நன்றி கார்த்திக். இந்தப்படத்தில் அனைத்து கலைஞர்களும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி. முனீஷ் அண்ணாவுடன் திரும்ப நடித்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் வெற்றியை விட எனக்கு மனதளவில் மிகப்பெரிய திருப்தியை இந்தப்படம் தந்துள்ளது அனைவருக்கும் நன்றி.

இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க, காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், திவ்யதர்ஷிணி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் திரைக்கதை எழுதி இயக்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்தப் கடந்த மே 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Actor Hiphop Tamizhadirector Karthik VenugopalanPT Sir Movie