விரட்டி விட்டார் காதலர் : யாமி கெளதம் ‘ஷாக்’

சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும் காலகட்டங்களில் கட்டிய மனைவிக்கு கோவில் கட்டி கும்பிடும் மனநிலையில் இருக்கும் ஹீரோக்கள் வாய்ப்பு கிடைத்து கையில் காசு பார்க்க ஆரம்பித்ததும் அப்படியே மாறிவிடுவார்கள்.

நடிக்கும் போது இளமையான நடிகையை பிராக்கெட் போட்டு கவிழ்க்கும் அவர்கள் கட்டிய மனைவிக்கு டைவர்ஸ் நோட்டிசை அனுப்பி விடுவார்கள்.

எல்லோரும் அப்படியில்லை என்றாலும் அந்த ஒரு சிலரும் கூட யோசிக்க வேண்டிய சமாச்சாரம் தான் இந்த சமாச்சாரம்.

ஹிந்தியில் ‘புல்கிட் சாம்ராட்’ என்ற ஹீரோவுக்கு ‘சனம் ரே’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அப்படத்தின் நாயகி யாமி கெளதமுடம் நெருக்கம் ஏற்பட்டு விட்டது. அந்த நெருக்கமே நாளடைவில் காதலாக மாற, ஏற்கனவே திருமணமான ‘புல்கிட்’ என்ன செய்வார்?

ஆமாம், எதிர்பார்த்தபடியே தனது காதலுக்கு இடைஞ்சலாக இருக்கும் மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டு யாமியுடன் காதலைத் தொடர்ந்தார். விஷயத்தைக் கேள்விப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் புல்கிட்ட விஜயகாந்த் ஸ்டைலில் காரித்துப்ப ஆரம்பித்து விட்டார்கள்.

அதோடு அவருடைய பெயரும் டேமேஜ் ஆகிவிட ரொம்பவே அப்செட் ஆகி விட்டார் புல்கிட். எங்கே இப்படியே போனால் வருகிற ஒன்றிரெண்டு வாய்ப்புகளும் வராமல் போய் விடுமோ? என்று பயந்து திடீரென்று தனது காதலி யாமியை கழற்றி விட்டுவிட்டு மீண்டும் மனைவியுடன் ஒன்றுசேர முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.

இந்த யாமி கெளதம் ஏற்கனவே தமிழில் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ‘கெளரவம்’ என்ற படத்தில் நடித்தவர்.

மேட்டர் எங்கேயோ ”சிங்க்” ஆகுதுல்ல…?

Pulkit SamratYami GautamYami Gautam Love
Comments (0)
Add Comment