திகட்ட திகட்ட காதல் போதையைத் தரும் பாடலில் ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் ஜோடி!

‘High on Love’ பாடலில் திளைத்த பிறகு, அடுத்து காதல் போதையை திகட்ட திகட்ட அனுபவிக்கும் காலம் வந்திருக்கிறது.

ஆம், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை என்றவுடனே அவரின் இசை போதைக்கு அடிமையாவதை தவிர்க்க முடியாது.

தன்னையறியாமல் கத்த வைக்கும், தரையில் நம் கால்களை நடனமாட வைக்கும். இதைவிட ஒரு போதை இருக்க முடியுமா என்ன?

‘பியார் ப்ரேம காதல்’ என்ற வார்த்தைகளும், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை என்ற அடைமொழியுமே யுவனின் இசை விருந்தில் நாம் மூழ்குவதற்கு தயாராக சொன்னது போல அமைந்தது.

முதல் போதையாக ‘High on Love’ அமைந்தது, நீண்ட காத்திருப்புக்கு பிறகு ‘Dope’ என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகிறது. மிக குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்த பாடல் ட்ரெண்டிங்கில் டாப் இடத்திற்கு சென்றதுடன், மில்லியன் பார்வைகளை மிக வேகமாக கடந்திருக்கிறது.

இரண்டு பாடல்களிலேயே ‘பியார் பிரேம காதல்’ படத்துக்கு ஈர்ப்பு அதிகமாகி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக ‘டோப்’ பாடல் இசை ரசிகர்களின் நரம்புகளுக்குள் புது எனர்ஜியை பாய்ச்சியுள்ளது” என்றார் இயக்குனர் இளன்.

மேலும் படத்தின் முழு ஆல்பத்தையும் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம் என்ற மகிழ்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் இளன். படத்தை கூடிய விரைவில் வெளியிடவும் தீவிரமான முயற்சிகள் நடந்து வருகின்றன.

பியார் பிரேம காதல் படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். கே ப்ரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோரோடு இணைந்து ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.

Harish KalyanPyaar Prema KadhalPyaar Prema Kadhal Movie NewsRaiza Wilson
Comments (0)
Add Comment