சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் அஜித்துக்கு தான் அழகா இருக்கு! : ராதாரவி புகழாராம்

ராதாரவி கலந்து கொள்ளும் விழா என்றாலே அந்த நிகழ்ச்சி களைகட்டும்.

எதையுமே வெளிப்படையாகவும், போல்டாகவும் பேசக்கூடியவர் இங்கிலீஷ் படம் ஆடியோ பங்ஷனிலும் அதை நிரூபித்தார்.

ஆர்.ஜே மீடியா கிரியேஷன் சார்பில் குமரேஷ் குமார் இயக்கத்தில் ராம்கி நடிக்கும் திரைப்படம் தான் ஆங்கிலப்படம்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு மற்றும் நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி (எ) நட்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ராதாரவி சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலைப் பற்றிப் பேசியது அரங்கத்தில் கைதட்டல்களை அள்ளியது.

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் பெருமளவில் வெற்றி பெற்று விடுகிறது, இருப்பினும் இது சினிமாவுக்கு முக்கியமல்ல ஏனென்றால் மீண்டும் ஒரு பெரிய பட்ஜெட் உருவாக குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வருடங்களாகும். ஹீரோ கால்ஷீட், இசையமைப்பாளர் கால்ஷீட், இயக்குனர் கால்ஷீட் என பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.

ஆனால் சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்றால் தான் தொடர்ந்து படமெடுப்பார்கள், அதன் மூலம் பல்வேறு கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமென்று கூறினார். மேலும் தியேட்டர் உரிமையாளர்களை சிறிய பட்ஜெட் படங்களையும் திரையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர் இந்த வெள்ளை முடி வெச்சிட்டு வர்ற ஹீரோக்கள்ல எனக்கு ரஜினி சாரைத் தான் ரொம்பப் பிடிக்கும். அவர்கிட்ட ஹீரோங்கிற பந்தாவே இருக்காது. எப்போதுமே எளிமையாகவே இருப்பார். அதுக்கப்புறம் இந்த சால்ட் அண்ட் பேப்பர் ஸ்டைல்னு சொல்றாங்க. அதுல அஜித் தான் ரொம்ப அழகா, இளமையா தெரிகிறார். இப்போ மூணாவதா ராம்கிக்கு அந்த வெள்ளை முடி பொருத்தமாக இருக்கு என்றவர் நானும் கொஞ்ச நாளா வெள்ளை முடியோட இருந்தேன். அதைப் பார்த்துட்டு என்ன சார் வயசாயிடுச்சான்னு கேட்குறாணுங்க… என்று சொல்லி முடிக்கவும் அரங்கம் சிரிப்பொலியால் அதிர்ந்தது.

ajithEnglish PadamEnglish Padam Audio LaunchRadha RaviRajinikanthRamki
Comments (0)
Add Comment