அம்மணமா நடிக்கிறது என்னோட இஷ்டம்! : அதிர வைக்கும் ராதிகா ஆப்தே!

‘கபாலி’யில் ராதிகா ஆப்தேவின் கெட்டப்பைப் பார்த்ததும் அடடா இப்படி ஒரு ஹோம்லியான பொண்ணா இது என்று வாய் பிளந்த ரசிகர்கள் தான் அதிகம்.

ஆனால் ஹிந்திப்படங்களில் அவர் அப்படி அமைதியாக இருக்கிற பார்ட்டியில்லை. மாறாக அட கபாலி ஹீரோயினா இது என்று மலைக்கிற அளவுக்கு கவர்ச்சியாக நடிப்பதில் வரைமுறை வைத்துக் கொள்ளாதவர்.

இதற்கும் அவருக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் வீட்டுக்காரர் கொடுத்திருக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் ராதிகா ஆப்தேவை எல்லை மீற வைத்திருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இவருடைய செல்ஃபி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு அனுராக் காஷ்யப் தயாரிப்பில் ராதிகா ஆப்தே அரை நிர்வாணமாக நடித்த போட்டோக்கள் லீக் ஆயின. தொடர்ந்து சமீபத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் தாயரிப்பில் குறும்படம் ஒன்றில் நிர்வாணமாக நடித்தார். அந்த குறும்படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பெரும் வைரலானது.

இப்படி அம்மண சமாச்சாரங்கள் அடுத்தடுத்து வெளியானாலும் அதைப்பற்றி தனக்கு துளியும் கவலையில்லை அது என்னுடைய தனிப்பட்ட சுதந்திரம் என்கிறார் ராதிகா ஆப்தே.

படுக்கை அறையில் நிர்வாணமாக நடித்தது எனக்கு ஏற்பட்ட சுதந்திரமாக நான் கருதுகிறேன். இனி எனக்கு கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. என்று எக்ஸ்ட்ராவாகவும் அதிர வைக்கிறார்.

அம்சமான பொண்ணு…! அடங்காப் பொண்ணு…!!

Actress Radhika ApteRadhika Apte
Comments (0)
Add Comment