ஜல்லிக்கட்டு போராட்டத்தில் துள்ளிக் குதிக்கிற காளையாக கடைசி நிமிடம் வரை மாணவர்கள், இளைஞர்களுடன் போராட்டத்தில் பங்கெடுத்தவர் நடிகர் லாரன்ஸ்.
இடையில் போலீஸ் தடியடியின் போது மட்டும் ஒதுங்கிக் கொண்டார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டாலும் இப்போது அதே போராட்டக்களத்திலிருந்து மாணவர்களும், இளைஞர்களும் அவர் பின்னால் அணி வகுத்து நிற்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த வெற்றியை கொண்டாட வேண்டும் என்கிற மனநிலை ஒருபுறமிருக்க அவரது நடிப்பில் மொட்ட சிவா கெட்ட சிவா படம் வருகிற பிப்ரவரி 17ம் தேதி உலகம் முழுவதும் வெளியாவதும் கிட்டத்தட்ட இன்னொரு கொண்டாட்ட மனநிலை தான்.
சாய் ரமணி இயக்கியிருக்கும் இப்படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருக்கிறார். அம்ரீஷ் இசையில் மாஸ் பாடல்கள் இப்போதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று விட்டது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அதற்கு முந்தைய வாரம் அதே போன்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கோபமாகப் பேசியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தான் ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்பதற்கான காரணத்தை நேற்றைய மேடையில் தெரிவித்தார்.
எனக்கு எந்த விஷயத்திலும் அவ்வளவு சீக்கிரத்தில் கோபம் வராது. 10 வருடங்களாக தர்மத்தோடும், நியாயத்தோடும் செய்து கொண்டிருக்கிற விஷயத்தை ஒருவர் குறை சொல்லி விட்டால் உடனே கோபம் வந்துவிடும். அதுதான் சில நாட்களுக்கு முன்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது.
அந்த சந்திப்பில் நீங்கள் 10 வருடங்கள் தர்மம் செய்தது இந்த பப்ளிசிட்டிக்குத்தானா? என்று கேட்டார். நான் அந்த சந்திப்பில் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லவே இல்லை. மாணவர்கள், இளைஞர்கள் விரும்பினால் வருவோம் என்று தான் சொன்னேன். ஆனால் நான் அரசியலுக்கு வரப்போவதாக எழுதினார்கள். பரவாயில்லை.
இந்தக் கேள்வி நான் 10 வருடங்களுக்கு முன்பு என்னிடம் கேட்டிருந்தால் கூட அது விளம்பரத்துக்காக என்று நீங்கள் நினைப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் நான் வளர்த்த பையன் என் தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும் போது அதை விளம்பரம் என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
நான் என்றைக்குமே விளம்பரத்துக்கு ஆசைப்பட்டது கிடையாது. ஒரு வேளை நான் பேசியது தவறாகப்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். ஆனால் நான் அன்று பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்பது என் கருத்து என்றார் லாரன்ஸ்.
வீடியோ வடிவில் பார்க்க :