மீண்டும் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹீரோயின் ஆன ‘ரைசா’

னது சொந்த பட நிறுவனமான ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ‘பியார் பிரேமா காதல்’ என்கிற படத்தை தயாரித்து வெற்றி பெற்றவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

தற்போது அவரது தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது.

இதை தொடர்ந்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பை இன்று வெளியிட்டார். ஆலீஸ் என்று வித்தியாசமான டைட்டிலோடு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, பியார் பிரேமா காதல் வெற்றி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த ரைசா வில்சன் கதாநாயகியாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் மணி சந்துரு படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார்.

‘ஆலிஸ்’ ஒரு பிரமாதமான கதை. இயக்குனர் கதை சொன்ன தருணத்திலேயே இந்த படத்துக்கு ஒரு பெரிய கதாநாயகி தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியால் அப்படத்தில் நடித்த ரைசாவை கமிட் செய்தோம். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யுவன் ஷங்கர் இசை அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது” என்றார் தயாரிப்பாளர்களில் ஒருவரான இர்பான் மாலிக்.

AliceRaiza Wilsonyuvan shankar raja
Comments (0)
Add Comment