சரித்திரப் பின்னணியில் அதிக பொருட்செலவில் மிகப்பெரிய பிரம்மாண்டப் படமாக ரிலீசான படம் ‘பாகுபலி.’
உலகம் முழுவதும் அப்படத்துக்கு வரவேற்பும், வசூலும் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கிடைத்தது. இதனால் முதல் பாகத்தைப் போலவே ‘பாகுபலி’யின் 2ம் ஆம் பாகத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.
இரண்டாம் பாகத்துக்கான வேலைகளை சமீபத்தில் தான் ஆரம்பித்தார் ராஜமெளலி.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் ‘இஞ்சி’ இடுப்பழகி படத்துக்காக வெயிட் போட்ட அனுஷ்கா அவசர கதியில் வெயிட்டை குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
இதற்கிடையே இரண்டாம் பாகமே இன்னும் தயாராகாத நிலையில் ‘பாகுபலி 3’-ம் பாகத்தையும் எடுக்க தயாராகும்படி இயக்குநர் ராஜமெளலிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறதாம்.
இதனால் இரண்டாம் பாகத்துக்கு ஏற்கனவே தயாராக வைத்திருந்த திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்து அதை மூன்றாம் பாகமாக்கும்படி முடிவை வைக்க பாகுபலியை வாங்கி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்த வினியோகஸ்தர்கள் தரப்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் ராஜமெளலியோ மூன்றாம் பாகமெல்லாம் சாத்தியமில்லை. முக்கியமாக படத்தின் நடிகர், நடிகைகள் ஏற்கனவே பல ஆண்டுகள் இரண்டு பாகங்களுக்காக காத்திருந்து நடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் பல பெரிய பட வாய்ப்புகளையும் இழந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை மேலும் மேலும் தொந்தரவு செய்வது அவ்வளவு நன்றாக இருக்காது என்று யோசிக்கிறாராம்.
காசு பார்த்தவர்கள் ஆயிரம் ஐடியாக்களை கொடுத்தாலும் முடிவு ராஜமெளலியின் கையில் தான்!