ராஜவம்சத்தில் நடித்தது பெருமை – சசிகுமார்

நடிகர் சசிகுமார் நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள படம் ராஜவம்சம். இப்படத்தை செந்தூர் பிலிம் இண்டெர்நேஷனல் சார்பில் டி.டி ராஜா தயாரித்துள்ளார். கதிர்வேலு இயக்கியுள்ளார். இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் சசிகுமார் பேசியதாவது,

“ராஜவம்சம் கூட்டுக் குடும்பத்தைப் பற்றிச் சொல்ற படம். அதைக் குடும்பமாகப் பார்க்கும் போது நம்ம எல்லாருக்கும் பிடிக்கும். நாற்பது நடிகர்கள் இருக்கிற படம்னா பட்ஜெட் ஜாஸ்தியாக இருக்குமே என்று நினைத்தோம். ஆனால் தயாரிப்பாளர் ராஜா சார் ரொம்ப நம்பிக்கையாக இருந்தார். இந்தப்படம் ஒரு நல்ல பீல் குட் படமாக இருக்கும்.

பெரியபெரிய சீனியர் நடிகர்களோடு நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இவ்ளோ பேரையும் கேண்டில் பண்ணிய கதிரும் கேமராமேனும் பாராட்டுக்குரியவர்கள். பர்ஸ்ட் இந்த டீம் பார்ம் ஆகுறதுக்குள் கொஞ்சம் சிரமமாக இருந்தது. பின் போகப்போக சரியாகிவிட்டது. இந்தப்படத்தில் எல்லாருமே அழகாக இருக்கிறார்கள். சினிமாவிலும் நாம் ஒரு குடும்பமாகத் தான் இருக்க வேண்டும்” என்றார்

Rajavamsamsasikumar
Comments (0)
Add Comment