‘கோச்சடையான்’ படத்தை கேவலமாகப் பேசியவர்கள், ‘லிங்கா’வை கழுவி கழுவி ஊற்றியவர்கள் என அத்தனை பேர் முகத்திலும் ஈயாடவில்லை ‘கபாலி டீசர்’ செய்த மகத்தான சாதனை!
வெளியான ஒரே வாரத்தில் 15 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று பாலிவுட் படமான ‘ஜூராசிக் வேர்ல்ட்’ படத்தின் சாதனையையே அசால்ட்டாக முறியடித்து விட்டது ‘கபாலி’ படத்தின் டீஸர்.
முன்னதாக அந்தப் படத்தின் இயக்குநர் ரஞ்சித்துக்கு ரஜினியை விட அவரது ரசிகர்களை எப்படி திருப்தி படுத்துவது என்பதில் தான் டென்ஷனாக இருந்ததாம்.
இரண்டு தோல்விகளுக்குப் பிறகு வரப்போகும் படமென்பதால் வந்த டென்ஷன் அது.
நல்ல வேளையாக ”எல்லாமே இனிமே நல்லா தான் நடக்கும்” என்பது போல டீஸருக்கு கிடைத்த பெரும் வரவேற்பில் ரொம்பவே நிம்மதியடைந்திருக்கிறார் ரஞ்சித்.
அதோடு ‘கபாலி’ படத்தின் டபுள் பாஸிட்டிவ்வை பார்த்த ரஜினி ”நானும் என்னமோ நெனைச்சேன்… சும்மா அதிருதுல்ல… ரொம்ப நாள் கழிச்சி பாலச்சந்தர் சாரோட படத்துல நடிச்ச மாதிரி ஒரு உணர்வு” என்றாராம்.
சொல்லும் போது ரஜினி முகத்தில் பரவசம், அதைக்கேட்ட இயக்குநர் ரஞ்சித் முகத்தில் சந்தோஷம்.
சும்மாவா… கபாலி டா…..