தள்ளிப் போகிறது ‘2. ஓ’ – முந்துகிறது ‘காலா’ ரிலீஸ்

ங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் அதிக பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாராகியுள்ள படம் ‘2.ஓ’.

அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

2 ஆண்டுகளுக்கும் மேல் தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதமே ரிலீஸாகியிருக்க வேண்டிய இப்படம் கிராஃபிக்ஸ் வேலைகள் முடிவடையாமல் இழுத்துக் கொண்டே போனதால் ரிலீஸ் தேதி ஏப்ரல் மாதம் என்று முடிவு செய்யப்பட்டது.

ரஜினி கூட 2.ஓ தான் முதலில் ரிலீசாகும், பிறகு தான் காலா ரிலீசாகும் என்று ரசிகர்கள் உடனான சந்திப்பின் போது கூறியிருந்தார். இந்நிலையில் 2 பாயிண்ட் ஓ படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆமாம், படத்தின் கிராபிக்ஸ் திட்டமிட்டபடி வேலைகள் முடியவில்லை. எனவே ஆகஸ்ட் 15 அன்று படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

2. ஓ படம் ரிலீஸ் தள்ளிப்போவதால் அதற்கு முன்பாக ஏப்ரல் 14-ம் தேதி காலா படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறது அப்படக்குழு. தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் ‘காலா’ பட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடையும் கட்டத்தில் உள்ளன.

விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 point okaalakaala releaseRajinikanth
Comments (0)
Add Comment