கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு தமிழ்நாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக தியேட்டர்கள் கிடைத்தாலும், ஆந்திராவில் தியேட்டர்கள் கிடைக்காமல் திணறி வருகிறது.
அதற்கு பொங்கலை முன்னிட்டு அங்குள்ள முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள் ரிலீசாவது தான் முக்கிய காரணம். அந்த வரிசையில் ஜனவரி 10-ம் தேதி தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் ‘என்.டி.ஆர்’ மற்றும் ராம்சரண் நடிக்கும் ‘வினய விதேய ராமா’ படங்கள் 90 சதவீத தியேட்டர்களில் தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது. இதனால் தான் பேட்ட படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.
இருந்தாலும் எல்லா மொழிகளிலும் ஒரே தேதியில் பேட்ட படம் ரிலீசாகும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்து விட்டதால் வேறு வழியில்லாமல் கிடைத்த தியேட்டர்கள் வரை பேட்ட படத்தை இந்த இரண்டு மாநிலங்களிலும் ரிலீஸ் செய்ய பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்தப் பிரச்சனையை முன்கூட்டியே அறிந்து கொண்ட விஸ்வாசம் படக்குழுவினர் அப்படத்தை ஜனவரி 26-ம் தேதி வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம்.