ஷூட்டிங்கே முடியல… சூடுபிடித்தது ‘கபாலி’ பிசினஸ்!

ஜினிகாந்த் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்பது தெரிந்த விஷயம் தான். விநியோகஸ்தர்களும் அதை வரவேற்று கொண்டாட ரிலீசுக்கு முன்னாடியே தயாராகி விடுகிறார்கள் என்பது தான் ஆச்சரியம் தரும் செய்தி.

மெட்ராஸ் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘கபாலி’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே உலகம் முழுக்க உள்ள ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது.

அதே இளமையுடன் கம்பீரமாக ரஜினி ஒரு சோபாவில் உட்கார்ந்திருக்கும் அந்த ஒரு புகைப்படமே படம் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கம் கிளறி விட்டு விட்டது. இன்னும் படப்பிடிப்பே முடியாத நிலையில் கபாலி படத்தின் பிசினஸ் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் கபாலி படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை அங்குள்ள பிரபல விநியோக நிறுவனமான சினிகேலக்ஸி வாங்கியிருக்கிறது. இதில் இன்னொரு சுவாரஷ்யம் என்னவென்றால் இந்த நிறுவனம் இதுவரை தெலுங்கு படங்களை மட்டுமே வாங்கி ரிலீஸ் செய்து வந்தது.

முதல்முறையாக ரஜினியின் கபாலி தமிழ்ப்படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கிறது. இதுவே படத்தின் மிகப்பெரிய வசூலுக்கு முதல் வெற்றி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பின்னே சூப்பர் ஸ்டார் படம்னா சும்மாவா..?

KabaliRajinikanth
Comments (0)
Add Comment