ஆடையை குறைச்சும் அள்ள முடியலியே..? : புலம்பும் ரகுல் ப்ரீத் சிங்

வரிடம் கொட்டிக் கிடக்கிற அழகுக்கு தமிழிலேயே இத்துணூண்டு ரவுண்டாவது வந்திருக்க வேண்டும்.

யார் கண் பட்டதோ? ‘புத்தகம்’, ‘தடையற தாக்க’ என தொடர்ந்து நான்கைந்து படங்களில் நடித்துப் பார்த்தும் தமிழ்சினிமா கை கொடுக்கவில்லை.

தமிழ் கை கொடுக்கா விட்டால் என்ன? இன்றைய தேதியில் தமன்னா, காஜல் அகர்வால், நயன்தாரா என கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளுக்கு தெலுங்கு பட உலகில் பலத்த போட்டியே ரகுல் ப்ரீத் சிங் தான்.

இப்படி இவர்களுக்குள் யார் கோடிகளில் சம்பளம் வாங்குவது? என்று போட்டி போட்டாலும் கொட்டிக் கொடுப்பவர் கொஞ்சமாவது யோசிக்க மாட்டாரா என்ன?

ஆளாளுக்கு இப்படி வந்த வேகத்திலேயே சம்பளத்தை உயர்த்தினால் நாங்கள் என்னாவது என்று யோசித்த தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் அதிக சம்பளம் கேட்கும் நடிகைகளுக்கு குட்பை சொல்லி விட்டு அவர்களுக்குப் பதில் புதுமுக நடிகைகளை தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.

தெலுங்கில் ரகுல் ப்ரீத் சிங் நடித்த படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டானாலும், படத்தில் அவரது அதிரடி ஆடை குறைப்புக்கும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அதற்காகவே தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்திப் பார்த்தார். யாருமே ரகுலை சீண்டவில்லை. இப்படியே போனால் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விடும் என்று பயந்தவர் ஆடையைக் குறைச்சும் அள்ள முடியலியே..? என்று புலம்பியபடி பழைய சம்பளத்தையே வாங்கிக் கொண்டு புதுப்படங்களுக்கு கால்ஷூட் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

தெலுங்குல தயாரிப்பாளர்கள் இப்படி இருக்காங்க.., தமிழிலும் தான் இருக்காங்களே..?

Rakul Preet Singhரகுல் ப்ரீத் சிங்
Comments (0)
Add Comment