பாபி சிம்ஹாவுக்கு ஜோடி கெடைச்சாச்சு

பாபி சிம்ஹா, நடிகை மதுபாலா மற்றும் சதிஷ் ஆகியோர் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ‘அக்னி தேவ்’.

இப்படத்தை ‘சென்னையில் ஒரு நாள் 2’ பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா ஆகிய இருவரும் இயக்குகின்றனர்.

இப்படத்துக்காக கதாநாயகி தேடலில் இருந்த இயக்குனர்களுக்கு ரம்யா நம்பீசன் ஓ.கே சொல்லியிருக்கிறார். ஆமாம், இப்படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் கதாநாயகியாக பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய் பிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன.

Agni Devbobby simhaRamya Nambessan
Comments (0)
Add Comment