நீங்க தான் அடுத்த சிம்ரன்! : புதுமுக நாயகியை புல்லரிக்க வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்!

வரிடம் உதவியாளராகப் பணிபுரிந்தேன் என்று சொல்லி வெளிக்கம்பெனிகளில் வாய்ப்பு தேடினாலே ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர்களுக்கு ஈஸியாக பட வாய்ப்பு கிடைத்து விடும்.

ஆனாலும் அப்படிப்பட்ட திறமையான தன் உதவியாளர்களுக்கு தானே முதல் பட வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அந்த வகையில் கெளதம் கார்த்திக், சனா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ரங்கூன் படத்தை தனது ஆஸ்த்தான தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் தனது உதவியாளரைப் புகழ்வது வழக்கமானது தான் என்றாலும் படத்தின் நாயகி சனாவின் பெர்பார்மென்ஸைப் பார்த்து தான் முகம் முழுக்க மகிழ்ச்சியோடு பேசினார்…

”சிம்ரன் நடிச்ச முதல்படத்துல நான் அசிஸ்டென்ட் டைரக்டரா வொர்க் பண்ணினேன். அந்தப்படத்துல அவர்களை ஸ்க்ரீனுக்கு முன்னாடி பார்க்கும் போது எப்படி வியந்தேனோ? அதேமாதிரி தான் இந்த ரங்கூன் படத்தைப் பார்க்கும் போதும் ஹீரோயின் சனாவைப் பார்த்து வியந்தேன்.

நிச்சயமா சனான் சிம்ரனோட இடத்துக்கு வந்து தமிழ் ரசிகர்களோட மனசுல இடம் பிடிப்பாங்கன்னு நம்புறேன். நல்லா நடிச்சிருக்காங்க, நல்ல ஸ்மைல் அவங்ககிட்ட இருக்கு” என்று புகழ்ந்து தள்ளினார்.

முருகதாஸின் பாராட்டு வார்த்தைகளைப் புரிந்து கொண்ட நாயகி சனா வெட்கத்தில் சிரித்தவர் டக்கென்று எழுந்து நின்று கை கூப்பி நன்றி தெரிவித்தார்.

AR MurugadossGautham KarthikRangoonRangoon Audio LaunchSana Makbul
Comments (0)
Add Comment