#Karthi #Raadhika Sarathkumar #Vishal #Nadigar Sangam #Sarathkumar
அடிதடி, கல்லெறிதல், கண்ணாடி உடைப்பு என பல கலாட்டாக்களுக்கு மத்தியில் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நடந்தேறி விட்டது.
பொதுக்குழுவில் எடுத்த முக்கிய முடிவுகளில் அதிர்ச்சியை கிளப்பி விட்டிருப்பது முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஆகியோரின் நிரந்தர நீக்கம் தான்.
இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக செய்தி வரவும் கொதித்து விட்டார் நடிகை ராதிகா.
அதோடு அவர் தற்போதையை நடிகர் சங்க பொருளாளாரான கார்த்தியிடம் சில கேள்விகளையும் முன் வைத்திருக்கிறார்.
இதுகுறித்து நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது :
“சரத்குமார், ராதாரவி இருவரையும் எப்படி நீங்கள் இடை நீக்கம் செய்யலாம்? இரு தரப்பும் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு நீதிமன்ற அவமதிப்பாகும்.?
நான் ஒரு சின்னத்திரை தயாரிப்பாளர். ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனத்தை தலைமையேற்று நடத்தி வருகிறேன். ஏன் நிகழ்ச்சி நிரல் தரப்படவில்லை? ஒரு ஆயுட்கால உறுப்பினரான என்னிடம் ஏன் எதையும் தெரிவிக்கவில்லை?”.
நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரான எனக்கு ஆதாரத்தைக் காட்டுங்கள். சங்கத்துக்காக உழைத்தவர்கள் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை வீசாதீர்கள். நடிகர் விஷாலிடம் முதிர்ச்சி இல்லை. நீங்களும் உங்கள் முட்டாள்தனத்தைக் காட்டாதீர்கள்.
எந்த கணக்கும் ஒப்படைக்கப்படவில்லை என்றீர்கள். உங்களுக்கு அளிக்கப்பட்டது காதல் கடிதங்கள் என நினைத்தீர்களா? தேர்தல் முடிந்தவுடன் சரத்குமார், நாசரிடம் அனைத்து கணக்கு வழக்குகளையும் தாஜ் ஹோட்டலில் சந்தித்து அளித்தார். அதற்கான வீடியோ ஆதாரம் இருக்கிறது. எதற்காவது விளக்கம் கேட்டீர்களா? கேட்டீர்கள் என்றால் அதை நிரூபியுங்கள்” என்று ஆவேசத்துடன் கேட்டிருக்கிறார் ராதிகா.