வருகிற படங்களை எல்லாம் வாங்கி போட்டுக் கொள்ளாமல் செலக்ட்டீவ்வாக நடித்து வருபவர் நித்யாமேனன்.
மணிரத்னத்தின் ஓ.கே கண்மணி, பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்தவர் தற்போது முடிஞ்சா இவன புடி படத்தில் சுதீப் ஜோடியாக நடித்து வருகிறார்.
எக்கச்சக்க பட வாய்ப்புகள் நித்யாவைத் தேடி வந்தாலும் வருகிற வாய்ப்புகளை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லையாம். மாறாக கதை பிடித்தால் மட்டுமே ஓ.கே சொல்கிறாராம்.
இதனாலேயே நித்யாமேனன் திமிர் பிடித்து அலைகிறார் என்கிற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்.
ஆனால் இதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் என்கிறார் நித்தி.
என்னை திமிர் பிடித்தவள் என சிலர் சொல்கின்றனர். அதுபற்றி எனக்கு கவலை இல்லை. நடிகையாவேன் என்று நான் எப்போதுமே நினைத்ததில்லை.
ஒரு ஜர்னலிஸ்ட்டாகத்தான் வேலை செய்ய ஆசைப்பட்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக நான் நடிகையாகி விட்டேன். எப்போதுமே நடிப்பை நம்பி நான் என் வாழ்க்கையை யோசித்ததில்லை. அதனால் தான் செலெக்ட்டீவ்வான படங்களில் மட்டும் நடிக்க கால்ஷீட் கொடுக்கிறேன்.
இதற்காக என்னை திமிர் பிடித்தவள் என்று யாராவது நினைத்தால் தாராளமாக நினைத்துக் கொள்ளட்டும் என்கிறார் நித்யாமேனன்.
செம தில்லுமா…!