ஆனால் இந்த உண்மையை பெரும்பாலான நடிகர்கள் உணர்ந்து கொள்வதில்லை. என்னமோ இவர்களை நம்பித்தான் தமிழ்சினிமாவே இருக்கிறது என்கிற மிதப்பில் திரிவார்கள். அப்படி ஒரு தெனாவெட்டான நடிகராக தமிழ்சினிமாவில் பார்க்கப்படுகிறார் பாபி சிம்ஹா.
குறிப்பாக சென்ற வாரம் ரிலீசான ‘அக்னி தேவி’ படத்தின் தயாரிப்பாளருக்கு பாபி சிம்ஹா கொடுத்த டார்ச்சரால் அந்தப்படத்தின் வசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. படம் ரிலீசான அன்றே ”என் படத்தை பார்க்க யாரும் தியேட்டருக்கு வர வேண்டாம்” என்று அவர் மீடியாக்களிடம் பேட்டி கொடுத்தது சக தயாரிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மேலும் ”தான் அந்தப் படத்தில் நடிக்கவே இல்லை” என்று பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு, பணம் போட்ட தயாரிப்பாளர் மீது ‘420’ வழக்கையும் போட்டு திமிரை காட்டியிருக்கிறார் பாபி சிம்ஹா.
இதுகுறித்து புகார் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரவும் பல முறை கூப்பிட்டும் வராதவர் படம் ரிலீசான பிறகு நடந்த கூட்டத்துக்கு வந்தார்.
அங்கும் கூட பாபிசிம்ஹா வந்திருந்த தயாரிப்பாளர்கள் யாரையும் மதிக்காமல் பேசியதாகவும், அக்னி தேவி தயாரிப்பாளரை ஜெயிலுக்கு அனுப்பாமல் ஓய மாட்டேன் என்று சபதம் போட்டு சென்றதாகவும் செல்கிறார்கள்.
அவருடைய இந்த மட்டமான நடவடிக்கையைப் பார்த்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதிலடி கொடுக்கும் விதமாக ”இனி எந்த தயாரிப்பாளரும் பாபி சிம்ஹாவை வைத்து படம் எடுக்கக் கூடாது, மீறி தயாரித்தால் அவர்களுக்கு எந்தவித தொழில் ஒத்துழைப்பும் கொடுக்கப் போவதில்லை” என்று ரெட் கார்டு போட ஆலோசித்து வருகிறார்கள்.
ஏற்கனவே இதே மாதிரியான புகார்களை ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’, ‘மீரா ஜாக்கிரதை’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர்களும் பாபி சிம்ஹா மீது கொடுத்திருப்பதால் அவர் தொடர்ந்து தமிழ்சினிமாவில் நடிப்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.
ஆணவம் தருவது அழிவே அன்றி, நிம்மதியான வாழ்க்கைக்கு அல்ல என்பதை ”பாபி சிம்ஹாக்கள்” புரிந்து கொண்டால் சரி!