இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார்.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் கதையை கேட்டு ஏற்கனவே அரவிந்த்சாமி பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கதையை கேட்ட ரெஜினாவும் தனது கதாபாத்திரம் வித்தியாசமாக சித்தரிக்கப் பட்டுள்ளதாகவும் தனக்கு இது நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று இயக்குனருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளது.
ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடக்க உள்ளது.