மெர்சலா ஒரு கெட்டப்! : ரெமோ ரகசியத்தை பாதுகாக்கும் சிவகார்த்திகேயன்

ங்கர் படங்களில் தான் அந்தப் படத்தில் நடிக்கின்ற ஹீரோவின் கெட்டப் எப்படி இருக்குமோ? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பரவ ஆரம்பிக்கும்.

ஏனென்றால் அவர் படத்தில் ஒரு ஹீரோ நடிக்கிறார் என்றால் கமிட்டான நாள் முதல் வெளியில் தலை காட்டாமல் படப்பிடிப்பு விட்டால் வீடு, வீடு விட்டால் படப்பிடிப்பு என்று ரிலீஸ் வரை கெட்டப் ரகசியத்தை பாதுகாப்பார்கள்.

‘அந்நியன்’, ‘ஐ’ என ஷங்கர் இயக்கிய படங்களின் ஹீரோ கெட்டப் எந்தளவுக்கு சீக்ரெட்டாக வைக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இப்போது தான் நடித்து வரும் ‘ரெமோ’ படத்திலும் அப்படி ஒரு வித்தியாசமான கெட்டப் பற்றிய ரகசியத்தை தான் பொத்தி பொத்தி பாதுகாத்து வருகிறார் சிவகார்த்திகேயன் .

முன்னதாக இப்படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ட்ராக் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் இருப்பது மாதிரியான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்கள்.

அதன் பிறகு கடந்த சில வாரங்களாக ஒரு சாதாரண இளைஞரைப் போல கீர்த்தி சுரேஷுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இந்த இரண்டு கெட்டப்புகள் தான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு என்று நினைத்தால், இப்போது மூன்றாவதாக ஒரு கெட்டப் ரகசியமும் கசிந்திருக்கிறது.

ஆமாம், லேடி கெட்டப், சாதாரண இளைஞர் இந்த இரண்டு கெட்டப்புகளைத் தவிர படத்தில் மூன்றாவதாக மெர்சலான ஒரு முதியவர் கெட்டப்பும் உண்டாம்.

பட ரிலீஸ் வரை அந்தக் கெட்டப் ரகசியம் வெளியில் தெரிந்து விடக்கூடாது அது தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே லேடி கெட்டப் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை அப்படியே வைத்து முதியவர் கெட்டப் ரகசியத்தை பாதுகாத்து வருகிறார்களாம்.

கெட்டப் ரசிகர்களிடையே செட்டானா சரிதான்!

Keerthi SureshREMOsivakarthikeyanகீர்த்தி சுரேஷ்சிவகார்த்திகேயன்ரெமோ
Comments (0)
Add Comment