விஜய் கால்ஷீட் கொடுப்பார், அவரை வைத்து குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து ஒரு இயக்குநராக நாம் ரீ-எண்ட்ரி போடலாம் என்று தான் திட்டமிட்டிருந்தார் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே சூர்யா.
ஆனால் விஜய்யோ எஸ்.ஜே சூர்யாவை டீலில் விட்டு விட்டு இயக்குநர் பரதனை கூப்பிட்டு தனது 60-வது படத்தை இயக்குகிற வாய்ப்பை கொடுத்து விட்டார்.
இதனால் நொந்து போன எஸ்.ஜே சூர்யா தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து ஒரு படத்தை இயக்கலாம் என்று போனார்.
அங்கும் அவருக்கு நல்ல சூழல் அமையவில்லை. இதற்கிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிலீசான இறைவி படம் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஒரு நல்ல நடிகர் என்கிற பெயரை பெற்றுத் தந்தது.
அதோடு இப்போது மீண்டும் அவரை ஹீரோ வாய்ப்பு தேடி வரக் காரணமாகவும் இருந்திருக்கிறது.
ஆமாம் வெங்கட் பிரபுவின் சரோஜா படத்தின் இரண்டாம் பாகம் கூடிய சீக்கிரம் ஆரம்பிக்கப் பட இருக்கிறது. வெங்கட்பிரபுவின் உதவியாளர் சமரன் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.
சரோஜா படத்தில் வேலை செய்த அத்தனை பேரும் இணையும் இந்தப் படத்தில் ஹீரோவாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறாராம்.
முதலில் படம் இயக்க ஆசைப்பட்டு இதில் நடிக்க மறுத்த எஸ்.ஜே சூர்யா இயக்குநராக வாய்ப்பு அமையாததால் தேடி வந்த ஹீரோ வாய்ப்பை ஏன் விடுவானேன் என்று நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா!