கறுப்புப் பணம் ஒழிப்புக்கு எதிராக பேசுபவர்கள் எல்லோரும் தேச விரோதிகள், பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் என்று போகிற ஊர்களில் எல்லாம் மேடை போட்டு முழங்கி வருகிறார் பிரதமர் மோடி.
அவரின் அந்தக் கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில் அதே உண்மையான இந்தியர்கள் குறித்து கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா.
ஆமீர்கான் நடிப்பில் நேற்று டிசம்பர் 23-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசான ‘தங்கல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப்படம் தமிழிலும் டப்பாகி ரிலீசாகியிருக்கிறது.
இந்தியாவில் மட்டுமே தங்கல் ரூ 30 கோடி வசூல் செய்துள்ளதாம், இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 50 லட்சம் வரை வசூல் செய்துள்ளது. மேலும், வெளிநாடுகள் எல்லாம் சேர்த்தால் ரூ 40 கோடி முதல் நாள் வசூல் வந்திருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
அந்தளவுக்கு நாட்டுப்பற்றைப் பேசும் மிகச்சிறந்த படமாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் தங்கல் திரைப்படத்தை பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவும் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.
அதோடு ‘நீங்கள் இந்தியனாக இருந்தால், முதலில் தங்கல் படத்தை பார்த்து விடுங்கள்’ என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
இதுக்கு மோடி என்னச் சொல்லுவாரோ..?