திரும்பிய பக்கமெல்லாம் தென்படுகிற ராணுவ வீரர்களின் தலைகளுக்கு மத்தியில் சில காட்சிகளை படமாக்குவதே திக் திக் அனுபவமாக இருக்கும்.
பார்க்கிற போதே மனசுக்குள் ஒரு ஜில் உணர்வைத் தருகிற படத்தின் போஸ்டர் டிசைன்கள். ஆமாம், முழுப்படத்தையும் காஷ்மீரிலேயே படமாக்கி விட்டு வந்திருக்கிறார் ‘சாலை’ படத்தின் இயக்குநர் சார்லஸ்.
விஷ்வா , கிரிஷா நடித்திருக்கும் இப்படத்தில் இப்படத்தில் ஆடுகளம் நரேனும் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.
மைனஸ் 30 டிகிரி குளிரில் படமாக்கி விட்டு வந்தது சவால் என்றால், பத்தடி தூரத்துக்கு குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியோடு ராணுவத்தினர் நிற்பதைப் பார்க்கும் போது மனசுக்குள் பயமே பனியாக உறைந்து போனதாம்.
”நாங்க முறைப்படி படம் எடுக்க பெர்மிஷன் வாங்கிட்டாலும் ப்ளைட்டை விட்டு இறங்கி நடந்தப்போ வழியெல்லாம் ராணுவ வீரர்கள் துப்பாக்கியோடு நின்னுக்கிட்டிருந்தாங்க. அவங்களைப் பார்த்ததிலிருந்தே மனசுக்குள்ள பயம். ஆனால் ஷூட்டிங் எடுக்கிற நாட்கள் செல்லச் செல்ல அவங்க ஒரு சாலையோரமா நிற்கிற செடி, கொடி மாதிரி தான் எங்க கண்ணுக்கு தெரிஞ்சாங்க. எந்த பயமும் இல்லை. அவங்களால எந்த தொந்தரவும் இல்லை. அதே மாதிரி அங்க இருக்கிற மக்களும் எங்களுக்கு ரொம்ப உதவியா இருந்தாங்க…” என்றார் இயக்குநர் சார்லஸ்.
ஹீரோவின் ஒரு சாலைப் பயணத்தில் அவர் எதிர்கொள்கிற பிரச்சனைகள் தான் த்ரில்லர் கலந்த இந்த ‘சாலை’ யாம்.
இந்தக் கதையை டைரக்டர் சார்லஸ் என்கிட்ட சொன்னப்போ என் தலைமுடியே நட்டுக்கிச்சு, அந்தளவுக்கு அவர் கதை சொன்ன விதம் ரொம்ப சுவாரஷ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. அதனால தான் காஷ்மீர் லொக்கேஷன்னு சொன்னபிறகும் தைரியமா படத்தை தயாரிக்கணும்னு இறங்கிட்டோம்”. எங்களுக்கு எப்படி ஒரு த்ரில்லான அனுபவத்தைக் கொடுத்துச்சோ? அதை விட இரண்டு மடங்கு த்ரில்லை இந்தப்படம் ரசிகர்களுக்கு கொடுக்கும் என்றார் தயாரிப்பாளர்களில் ஒருவரான ரஞ்சித் சக்கத்தி.
காஷ்மீர்னாலே செம் த்ரில் தான் போல…?