முன்னாள் காதலர் ரகசியம் : வருங்கால கணவரிடம் மறைக்காமல் சொன்ன சமந்தா!

மிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்தது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

இப்போது இருவருமே வீட்டார் சம்மதத்துடன் திருமணத்துக்கு தயாராகி வருகிறார்கள். அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற உள்ள நிலையில் தனது வாழ்க்கை பற்றிய சில ரகசியங்களை வருங்கால கணவரிடம் ஓப்பனாக சொல்லியிருக்கிறார் சமந்தா.

“என்னுடைய கடந்த கால வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் நாக சைதன்யாவுக்கு நன்றாகவே தெரியும். அவர் என்னை புரிந்து கொண்டுள்ளார். நான் அவரிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை.

என் முந்தைய காதல் குறித்து அவரிடம் கூறினேன். அவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் வாழ்க்கையிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தாலும், அதையெல்லாம் நான் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டேன். நான் வெளிப்படையாக பேசுவதால் என் திருமண வாழ்க்கையில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று நம்பிக்கையோடு பேசியிருக்கிறார் சமந்தா.

Naga ChaitanyaSamantha
Comments (0)
Add Comment