யோகிபாபுவும் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இப்படத்தின் புகைப்பிடிப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் சர்ச்சையைக் கிளம்பியது. சமூகவலைத்தளங்களில் சந்தானத்தை பலரும் கண்டித்தனர்.
பொதுவாகவே முன்னணி ஹுரோக்கள் சிகரெட் பிடிப்பது போல நடித்தால் அவர்களை கண்டித்து அறிக்கை விடுவார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி. ஆனால் ‘டகால்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு அன்புமணி வாயே திறக்கவில்லை. அவருடைய இந்த பாகுபாடும் பெரும் விமர்சனத்துக்குள்ளான நிலையில் சந்தானமே முன்வந்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
‘டகால்டி’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் புகைப்பிடிப்பது போன்ற காட்சி கவனக்குறைவால் இடம்பெற்று விட்டது. புகைப்பிடிப்பது உடல்நலனுக்கு தீங்கானது என்பதை நான் நன்கு அறிவேன். கண்டிப்பாக இனி நான் நடிக்கின்ற படங்களில் இதுபோன்ற காட்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்வேன் என்று தெரிவித்திருக்கிறார்.
அன்புமணி கண்டிக்காவிட்டாலும் செய்த தவறுக்கு தானாக முன்வந்து வருத்தம் தெரிவித்த சந்தானத்தை பாராட்டலாம்.