சந்தானம் கழட்டி விட்டார், சிவகார்த்திகேயன் கை கொடுத்தார்! – நண்பேன்டா…

காமெடியனாக மட்டுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சந்தானம் இன்றைக்கு ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படி அவரை ஒரு துணிச்சலான முடிவை எடுக்க வைத்ததில் டைரக்டர் ராஜேஷ் டைரக்‌ஷனில் வெளியான சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களும் முக்கியமானவை.

இந்தப் படங்களில் மட்டுமில்லாமல் அடுத்தடுத்து தான் இயக்கிய எல்லாப் படங்களிலும் கிட்டத்தட்ட படத்தின் ஹீரோவுக்கு நிகராக சந்தானம் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் ராஜேஷ்.

அந்தளவுக்கு சந்தானத்தின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியவரைத்தான் இன்றைக்கு கழட்டி விட்டிருக்கிறார் சந்தானம்.

ராஜேஷ் இயக்கத்தில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு உட்பட கடைசியாக வந்த சில படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் புதுப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடியவர் மீண்டும் சந்தானத்தை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார்.

கதையைக் கேட்ட சந்தானமும் ஓகே என்று சொல்லி விட்டு படத்தை ஆரம்பிக்காமல் மாதக்கணக்கில் இழுத்தடித்திருக்கிறார். இதற்கிடையே ராஜேஷின் நிலையைப் பற்றிக் கேள்விப்பட்ட சிவகார்த்திகேயன் ராஜேஷிடம் ஒரு கதையைக் கேட்டு நடிக்க சம்மதித்து விட்டார்.

இதனால் சந்தானம் படத்தை இழுத்தடித்துக் கொண்டே போவதால், நொந்து போன ராஜேஷ் சிவகார்த்திகேயன் படத்தை முதலில் இயக்க முடிவு செய்திருக்கிறார்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ”தன் எதிரி வீட்டில் போய் கையை நனைத்து விட்டு வந்திருக்கிறாரே?” என்கிற கடுப்பில் அந்தப் படத்தை ட்ராப் செய்து விட்டு ராஜேஷுக்கும் குட்பை சொல்லி விட்டாராம்.

நண்பேன்டா…

rajeshSanthanamsivakarthikeyan
Comments (0)
Add Comment