‘சர்கார்’ ஆடியோ ரிலீஸ் எங்கே தெரியுமா? – கசிந்தது ரகசியம்

.ஆர்.முருகதாஸ் விஜய்யோடு மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் ‘சர்கார்’.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் தயாராகி வரும் இப்படத்தின் சிங்கிள் டிராக்கான ‘சிம்டாங்காரன்’ பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. சென்னை வட்டார மொழியில் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கும் இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளுக்கு அர்த்தம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள்.

இருந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடலைக் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. இதனால் சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2ம் தேதி என்று அறிவித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் விழாவில் கலந்து கொள்ள பரிசுப் போட்டி ஒன்றையும் அறிவித்துள்ளது. ஆனால் விழா எங்கு நடக்கும் என்பது பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அந்த விபரத்தை ரகசியமாக வைத்திருந்தார்கள்.

தற்போது சர்கார் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் தான் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

A.R.MurugadossA.R.RahmanSARKARSarkar Audio Launchvijay
Comments (0)
Add Comment