‘சர்கார்’ ரிலீஸ் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சன் பிக்சர்ஸ்

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தயாராகியிருக்கும் படம் ‘சர்கார்’.

சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

கடந்த சில தினங்களாக இப்படம் தீபாவளியையொட்டி நவம்பர் 2-ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீசாகப் போகிறது என்று செய்திகள் வெளியானது.

ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால் படம் நவம்பர் 2-ம் தேதியா? அல்லது நவம்பர் 6-ம் தேதி தீபாவளி அன்றா? என்று விஜய் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருந்தனர்.

இந்நிலையில் சர்கார் படம் நவம்பர் 2-ம் தேதி இல்லை. தீபாவளி நாளான நவம்பர் 6-ம் தேதி தான் ரிலீசாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

தயாரிப்பு தரப்பிலிருந்தே ரிலீஸ் தேதி உறுதியானதைக் கேள்விப்பட்டு நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கும் விஜய் ரசிகர்கள் சர்கார் படத்தை வரவேற்கக் தயாராகி வருகிறார்கள்.

Keerthy SureshSARKARSarkar ReleaseSun Picturesvijay
Comments (0)
Add Comment