‘சர்கார்’ டீசர் எப்போது? – சுடச்சுட புதிய அப்டேட்

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் ‘சர்கார்’.

இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பாடல்கள் கடந்த அக்டோபர் 2-ம் தேதி சென்னையில் வெளியிடப்பட்டது. பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரே நாளில் பல மொழிகளில் இப்படம் வெளியாக உள்ள இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கிற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நடிகை வரலட்சுமி தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேசி வருகிறார்.

இப்படத்தின் டீசர் வருகிற விஜயதசமி அன்று வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Keerthy SureshSARKARSarkar Teaservijay
Comments (0)
Add Comment