ஒரு ஹீரோவுக்கான அத்தனை விதிகளையும் மீறி, மரபுகளை உடைத்து, இந்தியாவின் மகள்களான பெண்களுக்காக போராடும் கேரக்டராம்.
தீர்ப்புகள் விற்கப்படும் என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படம் பற்றி படத்தின் இயக்குனர் தீரன் கூறும்போது, ” இப்படத்தின் கதாநாயகன் சமுதாய நீதியின் போர் வீரன். சத்யராஜ் சார் சமரசமற்ற மனோபாவம் கொண்ட ஒரு மனிதர் என்பதால் அவர் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று தேர்ந்தெடுத்தேன்” என்றார்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் டைட்டிலை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான திருமுருகன் காந்தி வெளியிட்டார்.
அதுகுறித்து பேசிய இயக்குனர் தீரன் ”எங்கள் படத்தின் தலைப்பை அறிவிப்பதற்கு ஒரு நிஜ கள போராளி தேவைப்பட்டார். உடனே சமூக ஆர்வலர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை வைத்து படத்தின் தலைப்பை வெளியிட்டோம் என்றார்.
படத்தில் சத்யராஜ் தவிர்த்து அவரோடு சேர்ந்து நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும். படப்பிடிப்பு டிசம்பர் மாதம் ஆரம்பமாக இருக்கிறது.