‘சீமராஜா’ ஆடியோ ரிலீஸ் – மதுரையில் பிரம்மாண்ட விழா!

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ‘ரஜினி முருகன்’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தான் ‘சீமராஜா’.

சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகி பாபு என நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

டி. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 3ம் தேதி ரசிகர்கள் முன்னிலையில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

விழா குறித்து படத்தின் தயாரிப்பாளர் 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் ஆர்.டி. ராஜாவிடம் கேட்டபோது, ”மதுரை தமிழ்சினிமாவின் இதய துடிப்பாக விளங்கும் நகரம். இங்குள்ள ரசிகர்கள் சினிமாவுக்கு அளிக்கும் அன்பும், ஆதரவும் நம்ப முடியாதது. நாங்கள் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் தான் நடத்துவது என்பதில் தீர்மானமாக இருந்தோம்.

எங்கள் ஹீரோ சிவகார்த்திகேயனின் அபரிமிதமான வளர்ச்சியும், இந்த முடிவுக்கு மிக முக்கியமான ஒரு காரணம். மேலும் இந்த படத்தின் மையக்கதை, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியின் கிராமப்புறங்களை அடிப்படையாகக் கொண்டது. அதனால் இசை விழா நிகழ்ச்சியை மதுரையில் நடத்த, மனப்பூர்வமாக முடிவு செய்தோம்” என்றார்.

‘சீமராஜா’ படம் செப்டம்பர் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Seema RajaSeema Raja Audio Launchsivakarthikeyan
Comments (0)
Add Comment