சீறு படத்தில் இமான் களமிறக்கும் சிங்கர்ஸ்

ரத்தினசிவா இயக்கத்தல் ஜீவா நடித்த ‘சீறு’ படமும் ஒன்று. நகைச்சுவை, காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் என்று அனைத்து அம்சங்களும் நிரம்பிய முழுமையான வணிக ரீதியிலான படம் இது.

‘சீறு’ படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் தற்போது நகாஷ் அஷிஸ் மற்றும் மிர்ச்சி விஜய் ஆகிய இருவரையும் இந்தப் படத்தில் பாட வைத்திருக்கிறார். விவேகா எழுதிய இந்தப் பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. முழுமையடைந்த இந்தப் பாடல் குறித்து படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகும் ‘சீறு’ படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகும் தேதி குறித்து தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. ரியா சுமன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் நவ்தீப் எதிர்மறை வேடத்தில் நடிக்கிறார்.பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்ய, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

JeevajivamirchivijaySeeru
Comments (0)
Add Comment