கிட்னியில கல்லு : இதென்னப்பா நியூ இயர்ல வந்த லொல்லு?

2016 ஜனவரி 1 புத்தாண்டையும், தனது பிறந்தநாளையும் கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடித் தீர்க்க திட்டமிட்டிருந்தார் நடிகை வித்யாபாலன்.

இதற்கான ஏற்பாடுகளை கடந்த பத்து நாட்களாக செய்து கொண்டு வெளிநாட்டுக்கு கிளம்பிய நேரத்தில் தான் திடீரென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதனால் திட்டமிடப்பட்ட புத்தாண்டு ப்ளஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் முழுவதுமாக கை விடப்பட்டிருக்கிறது.

ஏன் என்னாச்சு?

நாளை ஜனவர் 1ம் தேதிதான் வித்யாபாலனின் பிறந்தநாள். இதோடு புத்தாண்டையும் கொண்டாட கணவர் சித்தார்த் ராய் கபூருடன் நியூயார்க் செல்ல மும்பை விமான நிலையத்துக்குச் சென்று பிளைட்டில் ஏறியிருக்கிறார்.

கிளம்பத் தயாராக இருந்த போது திடீரென்று கடுமையான முதுகு வலி ஏற்பட அவசரம் அவசரமாக அவரை கீழே இறக்கி மும்பையில் உள்ள தனியார் ஹாஸ்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்திருக்கிறார்கள்.

பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு ‘கிட்னியில் கல்’ இருப்பது தெரிய வந்திருக்கிறது. தற்போது மேல் சிகிச்சைக்காக பிரபல ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

”அவர் உடல் நன்றாகத் தேறி வருகிறது. சீக்கிரத்திலேயே பூரணமாக குணமடைந்து விடுவார்” என்கிறது லேட்டஸ்ட்டாக வரும் செய்திக்குறிப்பு.

‘கிட்னியில கல்லு’ இதென்னப்பா நியூ இயர்ல வந்த லொல்லு..?

Senior Actress Hospitalised
Comments (0)
Add Comment