இரண்டு தினங்களுக்கு முன்பு தான் அந்த பரபரப்பான செய்தி வெளியானது.
இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்த பிரம்மாண்ட படமான ”பாகுபலி” படத்தை எடுத்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் பிஸியாகியிருக்கிறார்.
இதில் முதல் பாகத்தில் நடித்த நட்சத்திரங்களுடன் கூடுதலாக நடிகை ஸ்ரேயாவும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என்ற செய்தி தான் அந்த பரபரப்பான செய்தி.
பரவாயில்லையே? மார்க்கெட்டே இல்லாத ஸ்ரேயாவை கூப்பிட்டு வாய்ப்பு கொடுக்கிறாரே? என்று ராஜமெளலியை எல்லோரும் பாராட்டினார்கள்.
படத்தில் ஸ்ரேயா ராணாவின் மனைவியாக வருகிறார் என்று அவரது கேரக்டரையும் பெரிதாகப் பேசினார்கள்.
இதனால் ஸ்ரேயாவும் கூடுதல் சந்தோஷத்தில் இருக்கிறார். ‘பாகுபலி 2’ ரிலீசானால் மீண்டும் அவர் மார்க்கெட் சூடுபிடிக்க ஆரம்பித்து விடும் என்றும் நினைத்தார்கள்.
ஆனால் அப்படி வந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று ஸ்ரேயாவே ஓப்பனாக மறுத்திருக்கிறார்.
நான் ‘பாகுபலி 2’ படத்தில் நடிப்பதாக வந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. எனக்கு ஆசை தான். ஆனால் ராஜமெளலி அழைக்கவில்லையே என்று வருந்துகிறார் ஸ்ரேயா.
கடைசியில ராஜமெளலியும் கை விட்டுட்டாப்லேயா? பாவம் ஸ்ரேயா