ஸ்ரேயா கட்டிக்காத்து வரும் அழகுக்கு இப்போதும் கூட நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகளுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
எப்போது வடிவேலு உடன் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டாரோ அன்றிலிருந்து அவருடைய மார்க்கெட் சரிவைக் காணத் தொடங்கி விட்டது.
ஸ்ரேயாவும் கடந்த மூன்று வருடங்களாக எந்த புதுப்பட வாய்ப்பும் இல்லாமல் நட்சத்திர கலை விழாக்களில் ஆடுவது, பேஸன் ஷோக்களில் கலந்து கொள்வது என்று கல்லா கட்டி வருகிறார்.
இடையில் வந்த ‘த்ரிஷ்யம்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கும் ப்ளாப்பாகி அவருடைய கேரியருக்கு கை கொடுக்கவில்லை.
இருந்தாலும் தனது மார்க்கெட்டை இழக்க விரும்பாத ஸ்ரேயா புதுப்பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக தனது சம்பளத்தை வெகுவாக குறைத்திருக்கிறாராம்.
ஹீரோயின் வேஷம் தான் என்றில்லாமல் எந்த கேரக்டராக இருந்தாலும் நடிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கும் ஸ்ரேயா சமீபத்தில் என்.டி.பாலகிருஷ்ணா நடிக்கும் ‘கவுதமிபுத்ரா சட்டகாரினி’ தெலுங்கு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இதில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும், இளவரசியாகவும் நடிக்கிறார்.
கோடியை நெருக்கும் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஸ்ரேயாவுக்கு இந்தப்படத்தில் நடிக்க 30 லட்சம் ரூபாய் தான் சம்பளம் தரப்பட்டிருக்கிறது.
கொடுத்த சம்பளத்துக்கு முகத்தை கோணிக்காமல் சைலண்ட்டாக வாங்கிக் கொண்டிருக்கிறார்.
சம்பளத்தை கொறைச்சாச்சு… யாராவது ஸ்ரேயாவுக்கு சான்ஸ் கொடுங்கப்பா…