சிம்புவுக்கு அம்மாவாக ஸ்ரேயா : அடக்கொடுமையே…?

‘எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்று புலம்பித் தள்ளுகிற அளவுக்கு ஸ்ரேயாவின் நிலைமை மோசமாகி விட்டது.

சில வருடங்களுக்கு முன்பு வரை ஜெயம்ரவியின் ஆரம்பித்து விக்ரம், ரஜினிகாந்த் வரை தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டவருக்கு திடீரென்று மார்க்கெட் டவுண் ஆகவும் கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டார்.

அவ்வப்போது தெலுங்கு, ஹிந்திப் படங்களில் தலை காட்டி வந்தாலும் அவர் வயசையொத்த நடிகைகளான நயன்தாரா, அனுஷ்கா போன்றோர் இப்போதும் தமிழ்ப்படங்களில் கோலோச்சு வருகிறார்கள். ஆனால் ஸ்ரேயாவுக்கு மட்டும் தமிழில் சமீபகாலமாக நல்ல வாய்ப்புகள் அமையவில்லை.

யாராவது தமிழில் தனக்கு எண்ட்ரி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தவருக்கு அவர் எதிர்பார்த்ததைப் போலவே இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஸ்ரேயாவின் ரீ-எண்ட்ரியை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

ஆனால் அந்த எண்ட்ரியோ ஸ்ரேயா சந்தோஷப்படும் அளவுக்கு இல்லை என்பது தான் லேட்டஸ்ட் தகவல்.

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் 3 கெட்டப்புகளில் சிம்பு நடிக்கிறார். இதில் தான் ஒரு கதாபாத்திரத்திற்கு சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளை கேட்டுப் பார்த்தும் யாருமே நடிக்க முன் வரவில்லையாம்!

அப்படி என்ன கேரக்டர் என்கிறீர்களா?

சிம்புவுக்கு அம்மாவாக நடிக்க வேண்டிய கேரக்டராம். இந்த அம்மாவின் வயிற்றில் இருந்து தான் இன்னும் இரண்டு சிம்புகள் பிறப்பார்களாம்.

இந்த கேரக்டரில் நடிக்க மற்ற நடிகைகள் மறுத்தாலும் ஸ்ரேயா மட்டும் வந்த வாய்ப்பை ஏன் விடுவானேன் என்று வேறு வழியில்லாமல் ஓகே சொல்லியிருக்கிறார்.

ஏற்கனவே ஹிந்தி த்ரிஷியத்தில் ஸ்ரேயா 15 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்த அனுபவம் இருப்பதால் இப்போது சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கவும் சம்மதித்திருக்கிறார் ஸ்ரேயா.

சிம்புவுக்கு அம்மாவாக ஸ்ரேயா!  அடக்கொடுமையே…?

AAAShriya SaranSimbuசிம்புஸ்ரேயா
Comments (0)
Add Comment