2 கோடி வேணும்! : முதலமைச்சர் மகனுக்கு செக் வைத்த ஸ்ருதிஹாசன்!

மலுக்கு மேக்கப் போடும் கலையில் புதிதாக எதுவும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கேரக்டரைச் சொல்லி விட்டால் அவரே அதற்கேற்ற மேக்கப்புக்கு தன்னை தயாராக்கி கொண்டு வந்து விடுவார்.

அப்படிப்பட்ட கமலுக்கு பிறந்த மகள் ஸ்ருதிஹாசனுக்கு சம்பளம் பேசுவதில் சொல்லித் தர வேண்டுமா என்ன?

பட வாய்ப்புகளை தக்க வைக்க வேண்டுமென்றால் முதலில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்ட ஸ்ருதி ஹிந்தி, தெலுங்கு, தமிழில் கூட கவர்ச்சியாக நடித்து திணறடித்து வருகிறார். சில படங்களில் அவர் காட்டிய மித மிஞ்சிய கவர்ச்சி அவ்வப்போது செய்திகளில் வைரலாகி சர்ச்சைகளைக் கூட கிளப்பியிருக்கிறது.

அவர் எதிர்பார்த்தபடியே நடிக்கிற படங்களும் ஹிட்டாவதால் மும்மொழிகளிலும் இன்றைக்கு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நாயகி வாய்ப்பு மட்டுமல்ல.., ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடக் கூப்பிட்டால் கூட ஓ.கே சொல்லி விடுவார் ஸ்ருதி. ஆனால் அதற்கு ஒரே ஒரு கண்டிஷன் தான். அவர் கேட்கிற சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுக்க வேண்டும்.

அப்படித்தான் சமீபத்தில் ஒரு கன்னடப்படத்தில் ஆடக் கூப்பிட்ட தயாரிப்பாளரிடம் சம்பளத்தைக் கேட்டு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் ஸ்ருதி.

வழக்கமான ஒரு பாடலுக்கு ஆட 1 கோடி மட்டுமே கேட்கும் ஸ்ருதி இதில் மட்டும் 2 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்.

அதற்கு காரணம் ஹீரோ கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் என்பது தான் என்றால் அதுவும் இல்லையாம்.

ரசிகர்கள் மத்தியில் அந்த ஹீரோ பிரபலமான முகம் இல்லை என்பதால் தான் 2 கோடி சம்பளம் கேட்டாராம் ஸ்ருதி.

இருந்தாலும் 2 கோடி என்பதெல்லாம் டூமச் என்று யோசித்த தயாரிப்பாளர் அவருக்குப் பதில் இப்போது தமன்னாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

கேட்டதைக் கொடு! இல்லேன்னா இடத்தை காலி பண்ணு!!

kamalhaasankumarasamyShruthihaasan
Comments (0)
Add Comment