என்ன தான் இயக்குநர் மணிரத்னத்தை இந்த உலகமே கொண்டாடினாலும் அவரிடம் உதவியாளராக வேலை செய்தவர்களில் யாருமே பெரிதாக சினிமாவில் சாதித்ததில்லை.
இருந்தாலும் அவர் பெயரைச் சொல்லி புதிதாக வரும் இயக்குநர்களுக்கு மவுசு மட்டும் குறைவதே இல்லை.
அப்படித்தான் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த மிலிண்ட் ராவ் ஆர்யாவின் தம்பி சத்யாவை ஹீரோவாக வைத்து ‘காதல் டூ கல்யாணம்’ என்ற படத்தை எடுத்தார். என்ன பிரச்சனையோ படம் ரிலீசே ஆகாமல் பல வருடங்களாக பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறது.
அறிமுக இயக்குநருக்கு முதல் படமே முடங்கினால் அவருடைய சினிமா கேரியர் என்னாவது?
நல்லவேளையாக மிலிந்த் ராவை கவலையில் மெலிய விடாமல் உதவி செய்ய முன் வந்திருக்கிறார் நடிகர் சித்தார்த்.
மிலிந்த்தின் திறமையை ஏற்கவே சித்தார்த் நன்கு தெரிந்தவர் என்பதால் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் தயாராகும் படத்தை இயக்குகிற வாய்ப்பை மிலிந்த்துக்கு கொடுத்திருக்கிறார் சித்தார்த்.
சித்தார்த் ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கும் இப்படத்துக்கு ‘தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
பொருத்தமான டைட்டில்!