‘பீப் சாங்’ சர்ச்சைக்குப் பிறகு மீடியாக்களிடம் அதிகம் தலை காட்டாமல் இருந்தவரை ‘விஜய் டிவி டிடி’ தன்னுடைய நிகழ்ச்சிக்கு வர வழைத்து விட்டார்.
டிடி அழைத்தால் கேடி கூட வருவார். சிம்பு வர மாட்டாரா..?
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்புவின் பேச்சு தான் அங்கு குழுமியிருந்தவர்களை மட்டுமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் ஆச்சரியப்படுத்தியது.ஏதோ ஒரு தத்துவ ஞானி போல பேச ஆரம்பித்தவர் திடீரென்று சூப்பர் ஸ்டார் குறித்து வெளிப்படையாக பேசினார்.
”சிம்பு ஏதோ சூப்பர் ஸ்டார் ஆக முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காருன்னு எல்லாரும் தப்பா நெனைச்சிக்கிட்டு இருக்காங்க. ஆனா நான் அதுக்கு முயற்சி பண்ணவே இல்லீங்க.
நான் சினிமாவுலயே இல்லேன்னு வெச்சிக்கங்க. நான் ஓபனா சொல்றன், எனக்கு சினிமா வேணாம், எனக்கு இந்த போட்டி வேணாம், நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளாங்கிற விஷயமே வேணாம். யாரு வேணும்னாலும் சூப்பர் ஸ்டார் ஆகட்டும், நீங்க யாரை வேணா தலையில வச்சி கொண்டாடுங்க, யாருக்கு வேணா நீங்க கை தட்டுங்க, எனக்கு அதைப் பத்தி கவலை கிடையாது.
நான் சினிமாவுல நடிக்க ஒரே காரணம்? மூணு வருஷம் ஒருத்தன் படம் பண்ணலன்னாலும், நீ வருவடா, உனக்காக நாங்க இருப்பன்டான்னு என்னோட ரசிகர்கள் எனக்காக நின்னாங்க பாருங்க, அது போதும். அதுக்காக மட்டும் தான் இவனுங்களோட குருமாவைலாம் கேட்டுக்கிட்டு சரி பரவாயில்லை, பண்ணுவோம் படம், அப்படின்னு பண்ணிக்கிட்டு இருக்கன். இல்லன்னா எனக்கு சினிமா தேவையே கிடையாது.
ஏன்னா, என்னுடைய டிரீம், என்னுடைய எய்ம், என்னுடைய லைஃப் டைம் அச்சீவ்மென்ட், இந்த உடம்பை விட்டு, இந்த உயிரை ஆண்டவன் எடுக்கறதுக்கு முன்னாடி, நான் ஒரு விஷயம் பண்ணணும் அப்படின்னா, இந்த உலகத்துல எந்த மூலைல வேணாம் ஒரு குழந்தை பொறக்கட்டும். அது சைனாகாரனுக்கு பொறக்கட்டும், அது ஆப்பிரிக்காகாரன் குழந்தையா இருக்கட்டும், அது அமெரிக்காகாரன் குழந்தையா இருக்கட்டும், அது என் தமிழினத்தைக் கொன்ன ஸ்ரீலங்கனோட குழந்தையா கூட இருக்கட்டும். எனக்கு அதப் பத்தி கவலை கிடையாது.
அன்னிக்கு அந்த குழந்தை பொறக்கும் போது, அந்தக் குழந்தைக்கு அன்னைக்கு சோறு கிடைக்கும், எஜுகேஷன் கிடைக்கும், தங்கறதுக்கு ஒரு இடம் கிடைக்கும், உடம்பு சரியில்லன்னா டிரீட் பண்ண ஆஸ்பிட்டல் கிடைக்கும். அந்த குழந்தை சந்தோஷமா, நிம்மதியா எந்த டென்ஷனும் இல்லாம அதுக்கு செக்யூரிட்டி கிடைக்கும்.
இந்த அஞ்சு விஷயமும் உலகத்துல எல்லா குழந்தைக்கும் நடக்கறதுக்கு சிலம்பரசன் ஒருநாள் காரணமா இருக்கான் அப்படின்னு சொன்னா, அன்னைக்கு தாங்க நான் சூப்பர் ஸ்டார், அதுவரைக்கும் நான் சூப்பர் ஸ்டார் கிடையாது” என்றார் சிம்பு.
சிம்புவின் இந்த ஸ்டேட்மெண்ட்டைப் பார்த்த விஜய் அஜித் ரசிகர்கள் சமூகவலைத் தளங்களில் வழக்கம் போல கழுவி கழுவி ஊற்ற ஆரம்பித்து விட்டார்கள்.
அதற்கெல்லாம் அசர்ற ஆளா…?