சித் ஸ்ரீராமின் தென்னிந்திய இசைப்பயணம்

சித் ஸ்ரீராமின் குரல் கடல் படத்தின் பாடல் வழியாக இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின் மனதிற்குள் அலையாக புகுந்தது. “இனி மறு வார்த்தைப் பேசாதே நாங்கள் உங்கள் ஃபேன்” என்றது இளைஞரினம். தற்போது அவர் தனது இசைப் பயணத்தை வேறோர் வடிவில் துவங்க இருக்கிறார்

Noise and Grains’, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள், உண்மை நிகழ்ச்சிகள், மற்றும் டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளுக்கு உருவாக்கம், தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டுவரும் ஒரு தயாரிப்பு நிறுவனம்.

இந்நிறுவனம் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஏ ஆர் ரஹ்மானின் ‘நெஞ்சே எழு’, இளையராஜாவின் ‘இளையராஜா 75’, அனிருத்தின் ‘சிங்கப்பூர் லைவ்’, நடிகர் விஜய் சேதுபதியுடன் ‘நம்ம ஊரு ஹீரோ’, எஸ் பி பாலசுப்பிரமணியம் – யேசுதாசுடன் ‘வாய்ஸ் ஆப் லெஜண்ட்ஸ்’ இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஆண்ட்ரியா, சின்மயி, ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் பலருடன் இணைந்து ‘மடை திறந்து’ இசை நிகழ்ச்சி தொடர்களை நடத்தி வரும் பெருமைக்குரியது.

இந்நிறுவனம் தங்களது அடுத்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக, சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசை சுற்றுப்பயணத்தை நடத்தவிருக்கிறது. பிப்ரவரி 08ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக துவங்கும் இந்நிகழ்ச்சி, அதனை தொடர்ந்து பிப்ரவரி 23ம் தேதி கொச்சினிலும், மார்ச் 07ம் தேதி மதுரையிலும் மற்றும் மார்ச் 13ம் தேதி பெங்களூரிலும் நடைபெறவிருக்கிறது.

Sidsriramsingersidsriram
Comments (0)
Add Comment