ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்கிறார் கீர்த்தி சுரேஷ்!

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் புதிய திரைப்படம்“சைரன்” .

மிகப்பிரமாண்ட பொருட்செலவில்,  குடும்ப அம்சங்கள்  நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் ஜோடி சேர்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிக்கிறார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

சமீபத்தில் வெளியான மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் காட்சித்துணுக்கு இப்போதே படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தற்போது இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது.

#Siren #சைரன்

actor jayam raviActress Keerthy Sureshdirector Antony BhagyarajSiren movie