கெட்டப் சேஞ்ச் : ரெமோவுக்காக சிவகார்த்திகேயன் பட்ட அவஸ்தை!

சொல்லி அடிக்கும் கில்லி போல ‘ரெமோ’ படத்தின் ரிலீஸ் தேதியை சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே அறிவித்து விட்டார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆறு நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் அந்த ஆறு நாட்களிலும் வசூலை அள்ளி விடலாம் என்பதான் அக்டோபர் 7-ம் தேதியை ரிலீஸ் தேதியாகக் குறித்திருக்கிறார்.

இதுவரை தான் நடித்த படங்களில் எந்த கேரக்டரிலும் மெனக்கிடலும் செய்யாமல் காமெடி கலந்து  தான் சமாளித்து வந்தார். சிவகார்த்திகேயன் சினிமா கேரியரிலேயே மிகப்பிரம்மாண்டமான படம் என்றால் அது ரெமோ தான். அப்படிப்பட்ட படத்துக்கு சிவகார்த்திகேயன் செய்த மெனக்கிடலும் கொஞ்ச நஞ்சமில்லை.

இப்படத்தில் வழக்கமான கமர்ஷியல் படங்களில் வரும் கேஷூவல் கேரக்டரைத் தவிர்த்து பெண் கேரக்டரிலும் வருவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த இரண்டு கேரக்டர்களைத் தவிர்த்து இன்னொரு முதியவர் கேரக்டரிலும் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த கேரக்டரின் லுக் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருந்தாலும், அதற்காக அவர் பட்ட கஷ்டங்களை சமீபத்தில்  நடைபெற்ற விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு சீஸன் 5’ நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

”’ரெமோ’ படத்துல ஒரு கேரக்டர் இருக்கு. அந்தக் கேரக்டருக்கு மேக்கப் போட்டு முடிக்கவே சுமார் 5 மணி நேரம் வரைக்கும் எடுக்கும். அது போட்டு முடியிற வரைக்கும் ஒரே எரிச்சல் வரும்.

அப்படி ஒரு அவஸ்தைக்கு மத்தியில் தான் மேக்கப் போட்டு நடித்தேன். அந்த அஞ்சு மணி நேரத்திலும் மேக்கப் எரிச்சல் தெரியாம இருக்கிறதுக்கு கலக்கப்போவது யாரு ஷோக்களை தான் நான் என்னோட மொபைல்ல பார்த்து ரிலாக்ஸ் ஆகிப்பேன்.” என்று தனது மேக்கப் ரகசியத்தை பகிர்ந்து கொண்டார் சிவகார்த்திகேயன்.

இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டா வெற்றி நிச்சயம் தான்!

Keerthi SureshREMOsivakarthikeyanகீர்த்தி சுரேஷ்சிவகார்த்திகேயன்ரெமோ
Comments (0)
Add Comment