சிவகார்த்திகேயன் – நயன்தாரா கூட்டணியில் இணைந்த ராதிகா சரத்குமார்

ன்னும் டைட்டில் வைக்கப்படாத ‘எஸ்.கே 13’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறது சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஜோடி.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இப்படத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வருகிறார் இயக்குனர் ராஜேஷ்.

ராஜேஷ் படம் என்றாலே நகைச்சுவைக்கும், ஜாலிக்கும், கலகலப்புக்கும் பஞ்சமிருக்காது. அப்படி ஒரு படமாக தயாராகி வரும் இப்படத்தில் முக்கியமாக கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார் ராதிகா சரத்குமார்.

இது குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, ”இந்தப் படத்தில் ராதிகா அவர்கள் இணைந்தது படத்துக்கு இன்னும் பாஸிட்டிவாக அமைந்திருக்கிறது. படத்தில் அவர் ஏற்று நடிக்கும் கேரக்டர் அவருக்கென்றே வடிவைமைக்கப்பட்ட கதாபாத்திரம் என்று சொல்லலாம். அவரைத் தவிர அந்தக் கேரக்டருக்கு யாரும் உயிர் தந்து விட முடியாது.

சிறந்த நடிகர்கள் மட்டுமல்லாமல், இத்தகைய பெரிய இயல்பான மனிதர்கள் ஒன்றாக சேர்ந்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இது எங்களது படத்தை மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்க உதவுகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன்” என்றார். ஹிப் ஹாப் ஆதி இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

NayantharaRadhikasivakarthikeyanSK 13SK 13 News
Comments (0)
Add Comment