எனக்கே இந்தப்படம் பிடிக்கவில்லை என்பதை கோச்சடையான் ஆடியோ ரிலீஸ் பங்ஷனிலேயே வெளிப்படையாகச் சொன்னவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இத்தனைக்கும் அந்தப்படத்தை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இயக்கியிருந்தார் அவரது இளைய மகள் செளந்தர்யா அஸ்வின்.
ரஜினியின் கணிப்பு படம் ரிலீசான முதல் நாளிலேயே தெரிந்து விட்டது. ரஜினி என்கிற ஸ்டாலான ஹீரோவை வெறும் அனிமேஷனில் பார்க்க ரசிகர்களே விரும்பவில்லை என்பதை அந்தப்படத்தின் தோல்வி உணர்த்தியது.
அதன்பிறகு எந்தப்படமும் இயக்காமல் ஈராஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த செளந்தர்யா இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்.
புல் அண்ட் புல் ரொமாண்டிக் காமெடிப் படமாக எடுக்க நினைத்த செளந்தர்யா ஹீரோவாக தனுஷ் நடித்தால் சிறப்பு என்று யோசித்திருக்கிறார்.
விஷயம் தனுஷ் காதுகளுக்குப் போக கண்டிப்பாக கால்ஷீட் தருகிறேன் என்று ஓ.கே சொல்லியிருக்கிறார்.
விரைவில் அக்கா வீட்டுக்காரரை வைத்து செளந்தர்யா இயக்கத்தில் ஒரு கமர்ஷியல் எண்டர்டெயினரை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.