என்னதான் கோடி கோடியாக சம்பாதித்தாலும் காலையில் நாலு இட்லி தானே சாப்பிடப் போகிறோம் என்றெல்லாம் மேடைகளில் தத்துவம் பேசுவார்கள் பிரபலங்கள்.
ஆனால் அவர்களே ஒரு படத்தில் கமிட்டாகிற போது கோடிகளைத் தான் எதிர்பார்ப்பார்கள். குறிப்பாக நடிகைகள் ஒரு படத்தில் கமிட்டாகி போது பணம் சம்பாதிப்பதிலேயே குறிக்கோளாக இருப்பார்கள். அந்தப் படத்தில் நம் கேரக்டர் எப்படி? அதில் நடித்தால் நல்ல பெயர் கிடைக்குமா? என்கிற பார்க்கிற வழக்கமெல்லாம் குறைந்து விட்டது.
இந்த பழக்கம் இப்போதுள்ள புதுமுக நாயகிகளுக்கு வந்தால் ஆச்சரியமில்லை. ஆனால் ஏற்கனவே புகழ்பெற்ற ஸ்ரீதேவிக்கு வந்தது தான் ஆச்சரியம். அப்படி கோடிகளுக்கு ஆசைப்பட்டு இன்று உலகமே வியந்து பாராட்டும் ”பாகுபலி” பட வாய்ப்பை தவற விட்டு புலம்பிக் கொண்டிருக்கிறது மயில்.
”பாகுபலி” படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி கதாபாத்திரத்துக்கு முதலில் ஸ்ரீதேவியைத்தான் கேட்டுப் பார்த்தாராம் டைரக்டர் ராஜமெளலி.
ஆனால் அந்தக் கேரக்டரில் நடிக்க 6 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார் ஸ்ரீதேவி. கொஞ்சம் குறைக்க முடியுமா? என்று பேசிப்பார்த்தும் சம்பள விஷயத்தில் கறாராக இருந்திருக்கிறார். அதன்பிறகு பேரம் படியாமல் தான் ரம்யாகிருஷ்ணனை 2.5 கோடிக்கு பேசி கமிட் செய்திருக்கிறார்கள்.
இப்போது ”பாகுபலி 2” படத்தை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் பாராட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அதில் நடித்த அத்தனை நடிகர், நடிகைகளையும் பாராட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த சிவகாமி கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்தத் தகவலைக் கேள்விப்பட்டதும் சம்பள விஷயத்தில் கறாராக இருந்திருக்கக் கூடாதோ? என்று கோடிகளுக்கு ஆசைப்பட்ட தன்னுடைய கறார் மனநிலையை நினைத்து புலம்போ புலம்பென்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் ஸ்ரீதேவி.
வயசான கட்டையான பிறகும் அள்ளி முடியிற ஆசை போகலையோ?