சில வருடங்களுக்கு முன்பு வரை தனது மகள் ஜான்வி சினிமாவில் எண்ட்ரி கொடுக்கப் போகிறார் என்று ஊடகங்கள் கொளுத்திப் போட்ட போது கொஞ்சம் ஓவராகவே பிகு பண்ணினார் மயிலு ஸ்ரீதேவி.
”அவ ரொம்ப சின்னப்பொண்ணு, இன்னும் சினிமாவுல நடிக்கிற அளவுக்கு பக்குவம் வரல, அவளை எப்போ சினிமாவுல இறக்கி விடணும்னு எனக்குத் தெரியும்” என்றெல்லாம் கெத்து காட்டினார்.
சினிமாவில் நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கிற அளவுக்கு பக்குவம் வரவில்லை என்று எந்த மகளைப் பற்றி ஸ்ரீதேவி சொன்னாரோ? அதே ஜான்வி தனது பாய்ப்ரெண்ட் உடன் லிப் டூ லிப் கிஸ் அடிக்கும் போட்டோக்கள் தான் இணையதளங்களில் சூட்டைக் கிளப்பின.
அவ்வப்போது தமிழில் விஜயகாந்த்தின் மகன் சண்முகப்பாண்டியன் ஜோடியாக நடிக்கக் கேட்டுப் பார்த்தார்கள் , ஆந்திராவிலிருந்து ராம் சரண் ஜோடியாகவும் நடிக்க அழைப்பு வந்தது என்கிற அதிர்ச்சி தகவல்களும் வராமல் இல்லை. அப்படி தேடி வந்த அத்தனை வாய்ப்புகளையும் உதறி விட்ட ஸ்ரீதேவி இப்போது மகள் நடிக்கத் தயாரான பிறகு பட வாய்ப்புகள் வராததில் ரொம்பவே நொந்து விட்டாராம்.
உடனே தனது நண்பரான ஹிந்தி இயக்குநர் கரண் ஜோகரிடம் ஜான்வியை கொண்டு போய் நிறுத்தி வாய்ப்பு கேட்ட்டிருக்கிறார். அவரும், தான் இயக்கப் போகும் புதுப்படம் ஒன்றில் வருண் தவான் ஜோடியாக நடிக்க வைக்க சம்மதம் சொல்லியிருக்கிறார்.
இதை விட்டால் வேறு வழியில்லை என்றாகி விட்டதால் இந்தப்படத்தை வைத்தே தேடி வருகிற புதிய வாய்ப்புகளை சின்ன மயிலுக்கு வளைத்துப் போடும் முடிவுக்கு வந்திருக்கிறார் ‘ பெரிய மயிலு’ ஸ்ரீதேவி!