விஜய்யின் ‘கத்தி’ வரை தமிழில் வரிசையாக ஹிட்டடித்து வரும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து தமிழ், தெலுங்கு இருமொழிப்படமாக ஒரு படத்தை இயக்கத் தயாராகி வருகிறார்.
பிரபல தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு நடிக்கும் இப்படத்தை ஹிந்தியின் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் இயக்கி வரும் ‘அகிரா’வை முடித்த கையோடு ஆரம்பிப்பதாக திட்டம்.
இதற்காக பட வேலைகளை துரிதப்படுத்தி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நாயகியாக நடிக்க வைக்க மாஜி நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை கேட்டுப் பார்த்தார்.
முதலில் ஜான்வியை நடிக்க வைக்க சம்மதம் தெரிவித்த ஸ்ரீதேவியும், போனிகபூரும் இப்போது பல்டியடித்து விட்டார்கள். அதற்கு காரணம் கரண் ஜோஹர் என்கிற ஹிந்திப்பட இயக்குநர் தான்.
அவர் இயக்கும் ஹிந்திப் படத்தில் ஜான்வியை அறிமுகப்படுத்த திட்டம் வைத்திருப்பதால் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க வைக்கக் கூடாது என்று ஜான்வியின் பெற்றோர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். ஜான்விக்கும் ஹிந்திப்படத்தில் நாயகியாக அறிமுகமாக இஷ்டப்பட்டதால் அவரும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க மறுத்து விட்டார்.
இபடி மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து தன்னை ஏமாற்றியதால் கடுப்பான ஏ.ஆர். முருகதாஸ் தனது படத்தில் ஜான்வியை அறிமுகப்படுத்தும் யோசனையை தூக்கி கடாசி விட்டு, இப்போது ரகுல் ப்ரீத் சிங்க்கை நாயகியாக்கி விட்டார்.