கூட சேர்ந்து நெருக்கமாக நடிக்கும் ஹீரோக்களிடம் வராத காதல், பார்ட்டிகளில் சிக்கும் தொழிலதிபர்கள் மட்டும் உடனே வருவது நடிகைகளின் வாழ்க்கையில் ‘வழக்கமாக’ நடக்கும் சமாச்சாரம் தான்.
ஆனால் இவர் எப்படி அவரின் காதல் வலையில் விழுந்தார் என்பது தான் ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் மூக்கில் விரலை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிற விஷயம்.
அந்த இவர் நடிகை சிருஷ்டி டாங்கே, அந்த அவர் இசையமைப்பாளர் சித்தார்த் விபின்.
மும்பையைச் சேர்ந்த சிருஷ்டி டாங்கே தான் தமிழ்சினிமாவில் ஏழைகளின் நயன்தாரா.
முன்னணி ஹீரோயின்களின் கால்ஷீ ட் கிடைக்காத இயக்குநர்கள் – தயாரிப்பாளர்களின் அடுத்த சாய்ஸ் சிருஷ்டி டாங்கே தான்.
இதனாலேயே ‘அச்சமின்றி’, ‘ஒரு நொடியில்’ உட்பட நான்கைந்து படங்களை வைத்திருக்கிறார்.
இவருக்கும், இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கும் ரகசியமாக காதல் ஒன்று ஓடிக்கொண்டிருப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள். இதற்கும் இருவருமே அதிகம் நெருக்கம் இல்லை. அப்படியிருந்தும் இந்த ஜோடிக்குள் எப்படி நெருக்கம் உண்டானது? இதெல்லாம் எப்ப நடக்குது? எப்படி நடக்குது? என்று கேள்விகளால் யோசிக்கிற போது தான் ‘நவரச திலகம்’ படத்தை கை காட்டுகிறார்கள் உள் விபரம் தெரிந்தவர்கள்.
மா.கா.பா ஆனந்த் – சிருஷ்டி டாங்கே நடித்த இந்தப்படத்துக்கு சித்தார்த் விபின் தான் இசையமைப்பாளர், சரி அப்படியிருந்தாலும் ஒரு நாயகியுடன் இசையமைப்பாளருக்கு எப்படி நெருக்கம் ஏற்படும் என்று கேள்வியெழ அதே படத்தில் வில்லன் ப்ளஸ் காமெடி கேரக்டரில் நடித்தது இதே சித்தார்த் விபின் தான். அப்போது படப்பிடிப்பில் இருவரும் நெருக்கமாகி விட்டதாகச் சொல்கிறார்கள்.
இந்த செய்தியை மேற்படி இருவரும் மறுத்தாலும் சிருஷ்டி படப்பிடிப்புக்காக சென்னை வருகிறார் என்றால் முதல் ஆளாக பிக்கப் பண்ணும் வேலையை கனகச்சிதமாக செய்வது சித்தார்த் தானாம்.
இந்த அக்கறைக்கு என்ன பேருங்கோ..?